பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கோப்பெருந்தேவியர் ராகிய குலச்சிறையார் நல்வழியில் செலுத்த முயன்ருர், சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுப் பூண்ட பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மன்னனது மாற்றம் கண்டு மயங்கினர். அறிவிற் சிறந்த அமைச்ச ருடன் கலந்து யாது செய்வதென ஆராய்ந்தார். 'மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி' என்று ஆன்ருேர் கூறுவர். மன்னன் சமண் சமயம் சார்ந்த தால் நாளடைவில் பாண்டி நாடே சமணிருள் சூழ்ந்த நாடாக மாறிவிடுமே என்று மனங் கவன்றனர். அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்." என்று அமைச்சனது கடமையைத் திருவள்ளுவர் அறிவுறுத்தினர். அரசன் அறிவுடையார் கூறும் அறிவுரைகளைக் கேளாமல், தானும் அறியாமல் இருப் பானுயினும் உறுதி பயக்கும் உண்மைகளே எடுத்து இடித்துரைக்க வேண்டுவது அமைச்சனின் இன்றி யமையாத கடமையாகும். குலச்சிறையார் உறுதி கூறல் ஆதலின், கடமையில் தவருத அமைச்சராகிய குலச்சிறையாரும் பாண்டியனே அடுத்துப் பரசமயம் புகுவது படுகுழியில் விழுவதற்கு ஒப்பாகும் என்று பலவாறு இடித்துரைத்தனர். அவர் உரைகளைப் பாண்டியன் சிறிதும் பொருட்படுத்த வில்லை. அவன் மங்கையர்க்கரசியாரின் கன்மொழிகளையும் கேட்க மறுத்து விட்டான். திருஞானசம்பந்தர் சிறப்பைத் தெரிதல் இந்நாளில் சோழ நாட்டிலுள்ள சீர்காழிப் பதியில் தோன்றிய திருஞானசம்பந்தர் என்னும் செந்தண்மை