142
கபோதிபுரக்
நாளாகவாக,பரந்தாமனுக்குக் கருணாநந்த யோகியினிடம் வெறுப்பும் கோபமும் வளர்ந்தது. உலகின் முன் அவனை இழுத்து நிறுத்திவிட வேண்டுமென்று எண்ணினான்.
இந்நிலையில், சென்னை வந்து சேர்ந்தார் கருணாநந்தர். தமக்கெனப் புதிதாகத் தயாரிக்கப்பட்டிருந்த மடத்தில் தங்கினார்.
சென்னை, நாகரிகத்திலும் படிப்பிலும் மிக முன்னேறிய நகரமாயிற்றே. இங்கு யோகியின் தந்திரம் பலிக்காது என்று பரந்தாமன் எண்ணினான். ஆனால் சென்னையைப் போல கருணாநந்தருக்கு ஆதரவு தந்த ஊரே இல்லையெனலாம். அவ்வளவு ஆதரவு தந்துவிட்டது சென்னை.
சீமான்களெல்லாம் சீடர்களாயினர். மேனாட்டுப் படிப்பில் தேறியவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் பத்திரிகைக்காரர்கள் யாவரும் சீடர்களாயினர்.
கருணாநந்தரின் தோழரொருவர், ஒரு பிரபல பத்திரிகையில் இருந்தார். அவர் யோகியின் குணாதிசயங்களைப் பற்றி, கட்டுரைகள் வெளியிட்டார். அவருடைய “தத்துவமே உலகில் இனி ஓங்கி வளரு” மென்றார். “அவர் சர்வமத சமாஜத்தை உண்டாக்குவார்” என்று கூறினார்கள் பலர்.
“அவருடைய கொள்கைக்கும், அரவிந்தர் கொள்கைக்கும் அதிக வித்தியாசமில்லை” என்று வேறொருவர் கூறினார்.
மடத்தின் வாயிலில் மணி தவறாது மோட்டார்கள் வரும். விதவிதமான “சீமான்கள்” அவருடைய பக்தி மார்க்கத்தைக் கேட்டு ஆனந்திப்பர்.
பரந்தாமன் திடுக்கிட்டுப் போனான். சென்னையின் நாகரிகம் அதன் கட்டடங்களிலும், மக்கள் உணவிலும் உல்லாச வாழ்விலும் காணப்பட்டதேயன்றி, உள்ளத்திலே