144
கபோதிபுரக்
அறையலாமா என்று தோன்றிற்று. “பொறு, மனமே பொறு” என்று நின்றான்.
"அழகாபுரி உமக்குத் தெரியுமோ" என்றாள் கோகிலம்.
“அங்கே என்ன அதிசயம்” என்றார் யோகி.
“அங்கே, ராதா என்றொரு பெண்...” என்று கோகிலம் கூறலானாள்.
தன் காதலி ராதாவின் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் பரந்தாமன் மிக ஜாக்ரதையாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்பதை உற்றுக் கேட்கத் தொடங்கினான். யோகியின் மடி மீது சாய்ந்தபடியே, அவள் ராதாவின் ரசமுள்ள கதையைக் கூறலானாள்.
கோகிலம், ராதாவின் சேதி பூராவையும், ஒன்றுவிடாது கூறினாள். ஒரு “போட்டோ” மூலம் தன் அண்ணன், அவளை மிரட்டுவதைக் கூறியபோது, “இது ஒரு பிரமாதமா? இருப்பதைக் காட்டி உன் அண்ணன் மிரட்டுகிறான். யாரவள், ராதாவா, கட்டழகி” என்று கொஞ்சினான் யோகி வேடம் பூண்ட போகி.
“உன் சமர்த்தை உரைக்க ஒரு நாக்கும் போதாதோ” என்று இசைத்தாள் கோகிலம் கிண்டலாக.
“கேள் கோகிலா? இருப்பதைக் கண்டு மிரள்வது இயல்பு. இல்லாததைக் கண்டு மிரள்வதை என்னென்பேன் பேதை மக்களிடம்
பேசினாயா நமச்சிவாயா என்பான்
பூசினையோ திருநீறு எனக்கேட்பான்.
என்று கேட்டு, பற்களை நறநறவெனக் கடித்து, மீசைகள் படபடவெனத் துடிக்க, அந்த நரகலோகத் தூதர்கள், சிவபக்தி அற்றவனின் சிரத்தில் குட்டி, கரத்தில் வெட்டி,