காதல்
145
எரிகிற கொப்பரையில் எறிந்து, சுடுகின்ற மணலில் உருட்டி, செந்தேள் கருந்தேள் விட்டுக் கொட்டவைத்து சித்திரவதை செய்வார். எனவே மெய்யன்பர்களே.
என்ற மணிமொழிப்படி, விபூதி ருத்திராட்சமணிந்து வில்வாபிஷேகனை வேண்டிட வேண்டும்” என நான் நரகலோக காட்சி பற்றி பிரசங்கிக்கும்போது ‘அடடா, இந்த மக்கள் தான் எவ்வளவு நம்புகிறார்கள். எத்தனைப் பயம்! இதை விட ராதாவின் பயத்தை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்’ — என்றான் யோகி.
“அதுவுஞ் சரிதான்” என்றாள் கோகிலம்.
“ஆகவே நீ என்னை அணைத்திட வாடி.அணைத்திட வாடி ஆனந்தத் தோடி பாடி”
என்று யோகி ஜாவளி பாடினான்; சரசமாடினான்; ஜடையைப் பிடித்திழுத்தான். அவள் இவன் ருத்திராட்ச மாலையைப் பிடித்திழுத்தாள். பொட்டைக் கலைத்தான் இவன். அவள் திருநீறைத் துடைத்தழித்தாள். கிள்ளினான்! கிள்ளினாள்; நெருங்கினான்! நில் என்றாள். சிரித்தான்! சீறுவதுபோல் நடித்தாள். எழுந்தான்! அவள் படுத்தாள்.
எட்டி உதைத்தான் கதவைப் பரந்தாமன், ஆத்திரம் தாளமாட்டாது!! “மட்டி மடையா!” எனத் திட்டினான். மாது கோகிலம் மருண்டாள். “மானத்தைப் பறித்திடுவேன், உன் சூது மார்க்கத்தை அழித்திடுவேன், ஊரை இதோ எழுப்பிடுவேன், உன் சேதி உரைத்திடுவேன்” என்று கோபத்துடன் கூறினான் பரந்தாமன்.
“பரந்தாமன்! பொறு பொறு! பதறாதே! ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இவள் என் சொந்த மனைவி கோகிலம்! கூறடி உள்ளதை. நான் குடும்பம் நடத்த முடியாது திகைத்தேன்; பாடுபட முயற்சித்தேன். உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இவ்வேடம் பூண்டேன். என்