காதல்
161
காரியத்தை நீ செய்து கொள். உன் உள்ளம், உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன ராதா? “இது ஆகுமா அடுக்குமா? தாலி அறுத்த முண்டைக்குக் கண் இழந்த கபோதியா?” என்றுதான் கூறுவர், ஏளனம் செய்வர், எதிர்ப்பர். நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னை சமூகம் பகிஷ்காரம் செய்வர். ஆனால், அதனைப் பற்றி நீ ஏன் கவலை கொள்ளவேண்டும். ராதா, கேள் நான் சொல்வதை! நான் கண்ணிழந்தவன்; ஆனாலும், உனக்குப் பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள இந்தச் சமுதாயத்தின் சித்திரங்கள் எனக்குப் புகட்டும் பாடம் இது தான்! சமூகம் திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும். தயங்கிப் பதுங்கினால் அவர்கள் மீது பாய்ந்து, அவர்களைப் பதைக்க வைக்கும்.
“ராதா, கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும்; முன்னால் சென்றால் ஓடிவிடும்.”
“பழக்கவழக்கமெனும் கொடுமையைத் தீவிரமாக எதிர்த்தால்தான் முடியும்” — எனப் பரந்தாமன் ராதாவிடம் வாதாடினான், தன்னை மறுமணம் செய்துகொள்ளும்படி.
ராதாவுக்கு, மறுமணம்–தான் தேடிய பரந்தாமனை நாயகனாகப் பெறுவது என்ற எண்ணமே அமிர்தமாகத்தான் இருந்தது. அவள் மனக்கண் முன்பு எதிர்கால இன்பச் சித்திரங்கள் அடுக்கடுக்காகத் தோன்றின. அவனுடைய அன்பு, தன்னைச் சூழ்ந்து தூக்கிவாரி இன்ப உலகில் தன்னை இறக்குவதாகக் கண்டாள். அவனுடைய கருவிழந்த கண்களில் காதல் ஒளி வெளிவரக் கண்டாள். சிங்காரத் தோட்டத்தில் அவன் கைப்பிடித்து நடக்க, காலடி சத்தம் கேட்டு மரக்கிளைகளில் அமர்ந்திருந்த கிளி, கொஞ்சுமொழி புகன்று, பறக்கக் கண்டாள். அவள் ஏதேதோ கூறவும் அவை, அணைப்பு, அவன் முத்தம், அவன் கொஞ்சுதல், அவன் கூடிவாழ்தல், அவனுடன் குடும்பம் நடத்துதல் இவை யாவும், அவள் மனக்கண் முன்பு தோன்றின.