உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கோமளத்தின்

அடிக்கடி பெருமூச்சு விடுவதும், ‘இது என்ன உலகம்! மின்னுவதைக் கண்டு மயங்குகிறது. மோசக்காரர் வலையில் இலேசாக விழுகிறது. பாடுபடுவோரைப் பாதுகாப்பதில்லை’ என்று முணுமுணுப்பான்.

எங்கே அந்தக் கோமளம்? அவளைக் காண வேண்டும். கண்டு, பழிக்குப்பழி வாங்கி, பாதகி என்று கேட்க வேண்டும். பரந்தாமனின் மனைவியின் பாதத்தில் இவள் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஏன் இதைச் செய்ய முடியாது? கோடி ரூபாய் இருக்கும் போது இது கூடவா கஷ்டம். பார்க்கிறேன் ஒரு கை என்று தீர்மானித்தான் லிங்கம்.

ஒரு தினம், வழக்கப்படி லிங்கம் தனது அழகிய மோட்டாரிலே மாலைக் காற்று வாங்கப் போனான். காற்றிலும் கடுவேகமாக வேறொரு மோட்டார் வந்தது. தனது மோட்டாரை நொடியில் தாண்டிற்று. பார்த்தான் லிங்கம். “ டிரைவர், யாருடைய கார் அது?” என்று கேட்டான்.

“அது குமாரி கோமளாதேவி என்பவரின் கார்” என்றான்.

“விடு வேகமாக அதன் பின்னால். உம்! சீக்கிரம்” என்று உத்திரவிட்டான்.

கோமளத்தின் காரைத் துரத்திக் கொண்டு கோடீசுவரனின் மோட்டார் ஓடிற்று. மோட்டார் டிரைவர் அலுக்கிற நேரத்திலே, கோமளத்தின் கார் ஒரு சாலை ஓரமாக நின்றது. லிங்கத்தின் காரும் நிறுத்தப்பட்டது. கோமளம், காரிலிருந்து இறங்கினாள். கூடவே ஒரு குச்சு நாய் குதித்தது. கோமளம் கீழே இறங்கிய உடனே புன்னகையோடு, அங்கு மிங்கும் நோக்கினாள்.

தன் மோட்டாரில் அமர்ந்தபடியே லிங்கம் அவளைப் பார்த்தான். மூன்று ஆண்டுகள் அவள் அழகையும் அலங்காரத்தையும் அதிகப்படுத்தினதைக் கண்டான். மூன்று