பக்கம்:கோயில் மணி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

கோயில் மணி

அவருடைய மனைவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்து யாவும் இறந்து போயின. இந்த ஒரு குழந்தைதான் உயிரோடு இருக்கிறது. ஆனால் தாய் இறந்து விட்டாள். அவர் இங்கே வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முன்பு இருந்த ஊரில் எல்லா வசதியும் இருந்தும் மனைவி இறந்தமையால் மனம் பொருந்தாமல் இங்கே வந்து விட்டார்.

அதுமுதல் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. அவள் தன் இளமைப் பருவத்தைத் தனியே போக்கி விட்டாலும் இனியாவது ஒரு துணையுடன் வாழலாமே! காதல் என்பது பருவத்தோடு போய் விடுவதா? உள்ளம் ஒன்றி வாழ்வதற்கு எந்த வயசானால் என்ன? அவளுக்கு ஒரு துணை வேண்டும். அதற்கு மேல் ஒரு குழந்தை வேண்டும்.

எப்படியோ இருவரும் குறிப்பாகப் பேசிக் கொண்டார்கள். ஒருவர் மற்றொருவர் எண்ணத்தைத் தெரிந்து கொண்டு வெளிப்படையாகவும் பேசினார்கள். “நான் இல்வாழ்வுச் சுகத்தை அநுபவித்தவன். நீயோ இந்த வாழ்வுக்குப் புதியவள். உனக்கு என்னால் முழுமை உண்டாகுமோ உண்டாகாதோ நான் அறியேன். என் வாழ்க்கைக்கு ஒரு துணை அவசியம். எனக்காக இல்லா விட்டாலும் இந்தக் குழத்தைக்காகவாவது ஒரு தாய் வேண்டும். அதனால் உன்னை மணம் செய்துகொள்ள இசைகிறேன். ஆனால், நாற்பது வயசான என்னிடம் இளம் பருவக் காளையிடம் காணும் இன்பத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்து, உன் வாழ்வைத் தியாகம் செய்ய முன்வருவாயானால், உன்னை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் வேலாயுதம்.

“நானும் முப்பத்தைந்து வயசுக் கிழவிதான். பேர் தான் குமாரி, என்னை மணக்கத் துணிந்த நீங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/118&oldid=1384114" இலிருந்து மீள்விக்கப்பட்டது