பக்கம்:கோயில் மணி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலர்ச்சி

129

“எங்கள் தெய்வத்தைப் பார்க்க வந்தேன்” என்றாள்.

“என்னடி இது, தோத்திரம் செய்யப் புறப்பட்டு விட்டாய்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

“ருசி கண்ட பூனை என்னவோ செய்யும் என்று சொல்வார்களே; அப்படி இருக்கிறதம்மா எங்கள் நிலை. நீங்கள் பூவைக் கொடுத்துக் கட்டி விற்கச் சொன்னிர்களாம்.”

“ஆமாம். அவனுக்கு எத்தனை ஆணவம் வேண்டாம் என்று சொல்லிவிட்டானே!”

பொய்க் கோபத்தோடு பேசினேன்.

“எங்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கிப் பிச்சை போட உங்களுக்கு ஆசையா அம்மா? உழைப்பாளியாக்கி ஊதியம் பெறச் செய்தீர்கள். அப்படியே இருக்கிறதைத்தான் அவர் விரும்புகிறார்.”

“நீ நன்றாகப் பேசுகிறாயே!”

“நான் வந்த காரியத்தைச் சொல்கிறேன்; நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது.”

“முகவுரை போதும்; காரியத்தைச் சொல்.”

“இந்த வீட்டில் இன்னும் நிறையப் பூச்செடிகளை வைத்து நன்றாப் பாடுபட்டால் அழகான பூந்தோட்ட மாக்கிவிடலாம் என்கிறார் அவர்.”

“செய்யட்டுமே!”

“நாள் முழுவதும் உழைத்தால்தான் அப்படிச் செய்ய முடியும். விடாமல் உழைத்தால் அதற்குப் பயன் உண்டு.”

“உழைக்கட்டுமே!”

கோயில்-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/135&oldid=1384206" இலிருந்து மீள்விக்கப்பட்டது