பக்கம்:கோயில் மணி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழைய குருடி

29

கொடுத்த முன்பணத்தில் மாசந்தோறும் பத்து ரூபாய் கழிப்பதென்று பேச்சு. அதன்படி இரண்டு மூன்று மாதங்கள் நடந்தது. பிறகு இன்னும் நூறு ரூபாய் வேண்டுமென்று கேட்டார் பால்காரர். “பணம் கொடுக்காவிட்டால் படிக்கு இரண்டணா ஏற்றித் தாருங்கள்” என்று சொல்லிவிட்டார். வேறு வழியின்றி அந்தப் பணத்தையும் கொடுத்துத் தொலைத்தேன். பால்காரர் பால் கறப்பதிலும் கெட்டிக்காரர், பணம் கறப்பதிலும் கெட்டிக்காரர் என்று தெரிந்து கொண்டேன்.

நாள்தோறும் இந்தத் தண்ணீர்ப் பால் வாங்கிப் போதவில்லை. அளவை அதிகப்படுத்தினால் நமக்குக் கிடைக்கும் தண்ணீரும் அளவில் அதிகமாகிறது. சண்டை, முன்பணம், தண்ணீர்ப்பால்—இந்தச் சங்கடத்தினின்றும் மீள வழி தெரியாமல் விழித்தேன்.

ன்று என் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றேன். மாலை நேரம் அது. பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பால்கொண்டு வந்து தரச்சொன்னர் அவர். அதை உண்டபோது அமிர்தம் போல இருந்தது. எங்கள் வீட்டில் எருமைப் பாலைக்கொண்டு வந்து கறப்பதாக நாடகமாடுகிறார் பால்காரர். பசும் பாலோ அவர் வீட்டிலிருந்துதான் வருகிறது. இரவு பால் சாப்பிடுவதாகப் பாவனை பண்ணுகிறோம். ஏலக்காயையும் குங்குமப்பூவையும் போட்டு ஈடு கட்டுகிறோம். “கறக்காமல் எப்படி யம்மா பால் கிடைக்கும்? எல்லாம் கறந்த பால்தான்” என்பார் பால்காரர். அவருக்குக்கூட நகைச்சுவை தெரியும்!

வெளுத்ததெல்லாம் பாலாக எண்ணி வாழும் எனக்கு அந்த நண்பர் வீட்டுப்பாலின் மனமே தனியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/35&oldid=1382788" இலிருந்து மீள்விக்கப்பட்டது