பக்கம்:கோயில் மணி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கோயில் மணி

இப்படி இருந்தார். காலக் கழுவிக்கொண்டு வந்தார். அந்தச் செருப்பை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார். சுவரில் முருகன் படம் ஒன்றை மாட்டியிருந்தார். அதன்கீழ் அமர்ந்துதான் அவர் தினந்தோறும் அநுபூதிப் பாராயணம் செய்வார். அங்கே கொண்டு போய் அந்தச் செருப்பை வைத்தார். ஒரு பூவை எடுத்து அதன் மேல் வைத்தார். ‘முருகா! முருகா! முருகா!’ என்று அவர் விம்மினார். அவர் அந்தச் செருப்பைப் போட்டுக்கொள்ளவில்லை; பூசித்து வந்தார்.

காலம் எப்படி எப்படியோ மாறியது. காளிமுத்துவின் மனைவியும் குழந்தையும் இறந்துபோனார்கள். பெரியவர் மனம் புண்பட்டதனால் வந்த விளைவோ என்று எண்ணினார், அவர் வாழ்த்துவாரேயன்றிச் சாபம் இட்டிருக்க மாட்டார் என்ற எண்ணம் அப்புறம் தோன்றியது. காளிமுத்துவுக்கு இப்போது ஒவ்வொரு பந்தமாக நழுவிக் கொண்டு வந்தது. வீடும் குலைந்து போயிற்று. அவர் வேலையை விட்டுவிட்டுக் கிடைத்த கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கோயில் கோயிலாகச் சென்று சுற்றனார். ஆறு படைவீடுகளையும் தரிசித்தார். பழனியில் ஒரு பெரியவரிடமிருந்து வைத்தியம் கற்றுக் கொண்டார்......பிறகு...... .

னக்கு அதற்குப் பிறகு நடந்த கதை தானே விளங்கிவிட்டது. “அப்படியானால்.....?” என்று ஆச்சரியத்தோடு நான் வாயைப் பிளந்தேன்.

“ஆம்; அந்தக் காளிமுத்துதான் இப்போது முத்தானந்தனாக இருக்கிறேன். அந்தப் பெரியவரின் தெய்விக உள்ளத்தின் பெருமையை இன்று நன்றாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/56&oldid=1382861" இலிருந்து மீள்விக்கப்பட்டது