பக்கம்:கோவூர் கிழார்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கொண்டு, தானே சோழ சக்கரவர்த்தியாக வேண்டுமென்ற ஆசை. நலங்கிள்ளியைப் போரில் வெல்லுவது எளிது என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். சில படைகளையும் திரட்டினான். “இந்த முடி என் தலையில் இருக்க வேண்டியது. நான்தான் சோழ குலத்தின் முறை யான வழித் தோன்றல்” என்று சொல்லிக் கொண்டிருந்தான். மன்னர் குலத்தில் ஒரு மன்னனுக்குப் பலர் புதல்வர்களாகப் பிறப்பார்கள். முதல் மகனுக்குத்தான் அரசுரிமை உண்டு. ஆயினும் மற்றப் பிள்ளைகள் அரசுரிமைக்கு ஆசைப்பட்டுச் சூழ்ச்சி செய்தும், படைப்பலம் கூட்டிப் போர் புரிந்தும் ஆட்சி செய்து வரும் மன்னனை விலக்கித் தாமே அரசு கட்டில் ஏறுவது சில இடங்களில் நடைபெறும். உலக வரலாற்றை ஆராய்ந்தால் இத்தகைய நிகழ்ச்சிகள் பலவற்றைக் காணலாம்.

நெடுங்கிள்ளி என்பவன் தான் சோழ குலத்தில் பிறந்த ஒன்றைத் தனக்கு வலிமையாக வைத்துக்கொண்டு, சோழ சிங்காதனத்தில் ஏற ஆசைப்பட்டான்; அதற்கான முயற்சிகளையும் செய்து வந்தான். நலங்கிள்ளியைப்பற்றி இழிவாகவும் பேசி வந்தான்.

இந்தச் செய்தியைக் கேட்டான் நலங்கிள்ளி. அவன் நினைத்தால் ஒரு நாளில் நெடுங்கிள்ளியை அழிக்கமுடியும். ஆனால் முதுகண்ணன் சாத்தனார் அமைதியையே உபதேசித்தார். பொங்கி வரும் தினத்தை அடக்கி அமைதியாக இருப்பதனால்,