46
தோன்றினவன் என்று சொல்லிக்கொள்ள உரிமை உண்டா?”
புலவர் தலைவர் பேசப் பேச அவருடைய சொற்கள் நெடுங்கிள்ளியின் உள்ளத்தைச் சுட்டன. சில சமயங்களில் அவர் வார்த்தைகள் அவனை உருக்கின. மேலும் அவர் பேசிக் கொண்டே போவதை அவன் விரும்பவில்லை. தான் செய்வது தவறு என்ற உணர்ச்சி அவனுக்கு உண்டாகிவிட்டது. அதுகாறும் தலையைக் குனிந்தவாறே கேட்டுக்கொண்டிருந்தவன் சற்றே தலை நிமிர்ந்தான்.
“புலவர் பெருமானே! என் குற்றங்களைப் பொறுக்க வேண்டும். தாங்கள் கூறுகின்ற காட்சிகளை நான் காணாமல் இருக்கவில்லை. கண்டேன்; ஆனால் கருத்தோடு காணவில்லை. இப்போது என் அறியாமையை உணர்கிறேன். இனி என்ன செய்வது என்று எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படிச் செய்கிறேன்” என்று மெலிந்த குரலில் அவன் பேசினான். அவன் வாயில் சொற்கள் மிடுக்கோடு வரவில்லை; தொடர்ந்தும் வரவில்லை. இடையிடையே அற்று அற்று வந்தன. புலவர் எடுத்துச் சொன்னவை அவன் உள்ளத்தை அரம்போல் அறுத்தன.
எனக்குத் தெரிந்தவை இரண்டு வழிகள். ஒன்று அறநெறி; மற்றென்று ஆண்மை நெறி. நலங்கிள்ளி நாட்டை விட்டுப் புறத்தே சென்றிருந்த காலத்தில் நீ இந்தக் கோட்டையைக்