பக்கம்:கோவூர் கிழார்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

எண்ணிவிட்டான். அதனால்தான் கோவூர் கிழாரின் கோபத்துக்கு ஆளானான்!

உடனே இளந்தத்தனாரை விடுவிக்கச் செய்தான். கோவூர் கிழார் சிறிது நேரங் கழித்து வந்திருந்தால் இளந்தத்தனாரின் உயிரை மீட்க முடியாமல் போயிருக்கும். நல்ல வேளை தக்க சமயத்தில் வந்து அவரைக் காப்பாற்றினர். நெடுங்கிள்ளியுடன் நெடுநேரம் பேச அவருக்கு விருப்பம் இல்லை. தாம் வந்த காரியம் நிறைவேறினவுடன் இளந்தத்தனாரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். அவருடைய கோபத்தை நேரிலே கண்ட நெடுங்கிள்ளியும் அவரைத் தங்கிச் செல்லும்படி சொல்லாமல் விடை கொடுத்தனுப்பினான்.

கோவூர் கிழார், புலவர் இளந்தத்தனர் உயிரை மீட்ட மகிழ்ச்சியோடு உறையூர்க் கோட்டையினின்றும் வெளிவந்தார். இளந்தத்தனாரையும் உடன் அழைத்துக்கொண்டு நலங்கிள்ளியை அணுகினார்.


7
உறையூர் முற்றுகை

“இனியும் நாம் சும்மா இருப்பது அழகன்று. அவனை அடியோடு அழித்தாலன்றி நாம் அமைதியாக வாழ முடியாது. பாம்போடு ஒரு வீட்டில்