பக்கம்:கோவூர் கிழார்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பாராட்டு கிறார்களோ அவர்களை நாடுவோம். வரிசையறியும் வள்ளல்களைத் தேடி அவர்களிடம் வரிசைக்கேற்ற பரிசில் பெறுவதற்காக ஏங்கிக் கிடக்கும் வாழ்க்கை இது. எங்களால் யாருக்கும் தீங்கே உண்டாவதில்லை. எங்களுக்குப் பகைவர் யாரும் இல்லை. எல்லா ஊரும் எங்கள் ஊரே. எல்லாரும் எங்கள் சுற்றத்தார். நாடுடைய அரசர்களுக்குத் தான் வலிமையும் பெருமையும் உண்டென்று சிலர் நினைக்கிறார்கள். எங்களுக்கும் இறுமாப்பு உண்டு; பெருமிதம் உண்டு. மண்ணையாளும் செல்வத்தையுடைய நீங்கள் நில வேந்தர். நாங்கள் புல வேந்தர். எங்களை ஏழைகள் என்று எண்ண வேண்டாம். எங்களுக்கு அறிவுடையுலகம் தலை பணியும்; துணை நிற்கும். எங்களைப் பகைத்துக் கொண்டவர்கள் நாணத்தை அடைந்து தலை யிறக்கமடையும்படி உலகம் செய்துவிடும். நாங்கள் எப்போதும் யாருக்கும் தலை குனியமாட்டோம்.”

அவருடைய மனத்தில் உள்ள கோபத்தின் அளவை நெடுங்கிள்ளி உணர்ந்துகொண்டான். மன்னர்களை யெல்லாம் பகைத்துக்கொண்டாலும் புலவர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது. புலவர்களுக்குத் தீங்கு இயற்றுபவர்கள் இம்மை, மறுமை இரண்டையும் இழப்பார்கள். உலகம் உள்ளளவும் அவர்களுடைய பழி நிற்கும். இந்த உண்மைகளை நெடுங்கிள்ளி அறியாதவன் அல்லன். இளந்தத்தனாரைப் புலவர் என்று அவன் நினைக்கவில்லை; ஒற்றனென்றே உறுதியாக