61
கோவூர் கிழார் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். சோழனுக்கு வந்த கோபத்தைக் கண்டு ஒரு வகையில் அவருக்கு உள்ளத்துள்ளே மகிழ்ச்சி உண்டாயிற்று. புலவருக்குத் தீங்கு இழைத்த செயலைப் பொறாமல் வெகுண்டான் சோழன் என்பதை நினைக்கும்போதுதான் அந்த மகிழ்ச்சி உண்டாயிற்று.
மன்னனுடைய கட்டளைப்படியே சோழர்படை, உறையூரை முற்றுகையிட்டது. ஆவூர் முற்றுகையைப்போல் இந்த முறை வெறுங் காவலாக இருக்கக் கூடாது. என்ன வந்தாலும் சரி; உறையூர்க் கோட்டைக்குள் புகுந்து பகைவர்களை ஒழித்துவிட வேண்டும்” என்று நலங்கிள்ளி சொன்னான். ஆகவே, போரிடும் வகையில் ஆயத்தமாகச் சோழப் படை உறையூர் மதிலைச் சூழ்ந்து நின்றது.
படை முற்றுகையிட்ட பிறகு, இனி எப்படிப் போரை நடத்துவது என்பதை அமைச்சர்களுடன் ஆராயத் தலைப்பட்டான் அரசன். இனி முடிந்த முடிபாக நெடுங்கிள்ளியின் குறும்புக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற உறுதியே அவனிடம் மேலோங்கி நின்றது. அமைச்சர்களும் கோவூர் கிழாரும் அங்கே இருந்தனர். அப்பொழுது தன் கருத்தை நலங்கிள்ளி வெளியிட்டான்.
அமைச்சர்கள் அவனுடைய கருத்துக்கு மாறு சொல்லவில்லை. தம்முடைய மன்னனது கருத்தே ஏற்றதென்று சிலர் கூறினர். மன்னன் கோவூர் கிழாரை நோக்கினான். “இப்போது புலவர்பெரு