பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி ஒரு கருவியே. உள்ளத்துக்கு உள்ளத்தை அறிமுகப்படுத்துவதால் அக்கருவி தனித்தன்மை வாய்ந்தது. தமிழ் மொழியோ தெளிவோடும், இனிமையோடும், தூய்மையோடும் அப்பணியைச் செய்வது. அதல்ை தமிழ் இறைமைத் தன்மிையது. அது பழுதுபடல் இறைமைத் தன்மைக்கே பழுதாகும். பழுதின்றிக் காக்க நா வாழ்த்துவதில் பொருள் உண்டு. வாழ்த்தாய் நறுநாவே! வாழ்த்துதும் வாழ்த்தி வணங்குதும். கந்தமிழ், வாழ்த்துதும் வாழ்த்தி வளர்க்குதும் என்றுே வாழ்த்தாய் கறுநாவே வாழ்ந்தகம் தாய்மொழி வாழ்வியல் சீர்மொழி வான்புகழ்ச் சீரொடு வாழ்கென வாழ்த்திடு வாய் ! கீழ்கதிர்ப் பேரொளி, ஆழ்கடல் தேர்வளம், வீழ்கணித் தேன்சுவை, வாள்தரும் கூர்திறம், யாழ்தரும் சீரிசை யாவுமாம் தீங்தமிழ் "வாழ்வகை ஈகென வாழ்த்தாய் ! இடரெலாம் ஆழ்கென வீழ்த்திட லான். 7