பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். மூன்றுகழி இரண்டுசுழி இங்'தென் றுச்சரித்தோம் சுழிபார்த்த மாடாய்: ஆன்றாம தருந்தாய்மை மொழியே ஆக்கமுற நுணுக்கமறிந் துரையோம்: தோன்றுபிற மொழிநுணுக்கங் கண்டோம். டண்ணகரம், றன்னகரம் என்றும் சான்றமைந்த தந்நகரம் என்றும் சார்பறிந்து வழங்கல் தமிழ்த் தொண்டாம் ! என்புருக்கி நோய்நீக்கும் ஒருவன் எடுப்பான மூலிகையொன் றறிந்தே துன்படக்கிப் பிணிதீர்த்து வந்தான்: தொலைவில்வாழ் பிணியாளன் ஒருவன் "அன்பையா : மருந்தெழுதி விடுப்பீர்; அங்குவர இயலாதேன்' என்ருன்; தென்பாங்குத் தமிழெழுத்தின் துணுக்கம் தெரியாதான் மருந்தெழுதி விடுத்தான். 107