பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்பாடு

வணக்கம் எனக்கை குவித்துவாய் ஆர
இணக்கமாய் ஆசாற் கியம்பு !
சூழ்நிலை, காலம், சுவைச்சொல் உணர்ந்துநன்
காழ்ந்து பழகல்பண் பாடு.

பல்லொரு முத்து.
பல்லொரு முத்தாய்ப் பளிச்சிடச் செய்திடின்,
இல்லையாம் சொல்லில் இடர்.

பளிச் சிடாப் பல்லும் பறிக்கா நகமும்
பழிச்சுமை மாணவர் பாங்கு.

படிப்பில் பயன்.
விடியல் இருமணி, அக்தி அதுவாய்ப்
படிப்பின் விளையும் பயன்.

ஐயம், பிழைகள் அகற்றாது கற்பது

  • செய்யிற் களைநோய் செறிப்பு.

  • செய் - வயல்,

118