பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் 'ஒப்பிய காதலர் ஒழுக்கத்தை, பெற்றேர் தப்பெனில், மணப்பவர் தழுவியே மறைவதை, அப்பா: அகப்பொருள் இலக்கண, இலக்கியம் செப்புமே உடன்போக் கெனப்பேர்; தங்கையும் அப்படிப் போயினள்: அப்பா,நாம் தேடிப்போய்க் கைப்பிடியாய்க் கொடுவந்து கடிமணம் புணர்ப்பதில் தப்பில: தமிழ்ப்போக்கு தான்.” (வெண்டுறை.) "ஒட்டுங்கள் அப்பா ஒளிர்சினம்' எனச்சொலி அன்னேன் கூட்டியே சென்ற குமரன் எவ'னென்ருன்; தந்தை: "கூட்டியே சென்ற குமரன் எவனென்று கேட்டியேல் மறுப்பாய், கீழ்வீட்டுக் குமரனென் ருரே. (ஆசிரியத்துறை.) "குமரனவன : குறும்பனவனே ! கமழுமெனது கருத்தெதிர்ப்பவன்; சமநிலையதே சமுகமென்பனே ! உமிழ்வதன்றி.நான் உதவவொண்ணுமோ ? (வஞ்சித்துறை.) 140