பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். கிள்ளைமொழி ஆழ்வார்கள் கிளந்திட்ட பெருநூற்கு வெள்ளேயாய்ப் பெருவிளக்கம் வரைவதாய், வடமொழியைத் தள்ளாமல் தமிழ்தள்ளித் தகர்த்திட்டான் தமிழ்நடையை, பிள்ளையெனும் போர்வையிலே பெரியவாச்சான் எனும்பெயரோன். நையாத தமிழினுக்கு நலிவைமுன் அவர்செய்ய, ஐயா,பல் கலைக்கழக ஆராய்ச்சி செய்திட்டோர் "மெய்யாக வடமொழியே முதலாகும் எனக்கூறி வையாமல் புரிந்திட்டார் வாள்வீச்சு தமிழினுக்கே. 47