பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். அவ்வழி, முதற்பெருஞ் சமூக முதல்வர் தோன்றி முற்கியும், கனைத்தும், மொணகியும், கூவியும், சொற்குறிக் கொலித்தும், சொல்லுரு வாக்கியும், ஒருசொற் கொண்டே ஒண்பொருள் பெருக்கியும் திருமொழி எனுந்தமிழ்ப் பெருமொழி படைத்த திறமெனும் முதலதி காரம் தெளிப்பன்: பசியும், பரிவும், பற்றிப் பணக்கப் புசித்திடத் துடித்தனர்: புன்பயிர் உகந்ததை 'ஆ'வென அருந்தினர்: "ஈ"யெனச் சுவைத்தனர்: 'ஊவென உண்ண 'ஏ'யென எய்தனர். 'ஓ'வெனும் ஒலியால் ஒடுநீர் பருகினர்: 'ஐ'யென வியந்தனர் ஒளவியம் அறியார், ാ கிடுக்கில் பாய்ந்த கிழங்கைத் தூறெடு பறிக்கத் துதைந்த பாறையின் சில்லுடைப் பக்கம் கல்லிப் பெயர்த்தனர். கல்லப் பட்டதைக் கல்லெனச் சொல்லினர். சிந்தையைக் கல்லிச் சிந்த&ன் இயக்கி அந்தக் கல்லலால் அறிவியல் புகுதலால் கல்வியென் ருெருசொற் கண்டனர். 1. ஊ - ஊன். 2 ஏ - அம்பு. 3 ஐ - வியப்பு, 4 ஒளவியம் - பொருமை. 73.