பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தமிழ்ப்பண்பா டொழுக்கமதன்
தகவறிந்து தழுவவரும்
இமிழ்கடலார் உலகினத்தார்
இனியரென அரவணைத்துக்
கமழ்அன்பால் நண்பரெனக்
கண்டிடுவோன் தமிழ்ப்பண்பன்;
அமிழ்தன்புக் குயிரதையும்
அளித்திடுவோன் அருந்தமிழன். 90

உள்ளத்தே கேடெடுத்தே,
உதட்டகத்தே பீடெடுத்து,
முள்ளொத்தே மொழியெடுத்து,
முறுவலித்த முகமெடுத்த
கள்ளத்தார் தமையொதுக்கிக்
'கசடற்றார் தம'ரெனவே
கொள்ளத்தான் 'யாதும்மூர்
யாவருங்கே ளிர்'என்றான்.

91

(தரவு கொச்சகக்
கலிப்பாக்கள்)

62