பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

சான்றோர்கள் இக்குறிப்பைச் சார்ந்து நின்று

- х - கடைப்பிடித்தார்!

ஈன்றுபுறத் தந்தில்லில் இயைந்திருக்குந் தாயுள்ளஞ் சோர்ந்துவிடுஞ் சொற்சொல்லார்; சேயிழிவு செயின்,தந்தை சான்றோனாக் கிலன்எனத்தாய் சாம்புவளென்

றெண்ணினரே, |06

செந்தமிழர் இவ்வகையிற் செறியவைத்த பண்பெல்லாம் நந்தமிழ்நர் நயக்காமல் நலித்திட்டார்; நவைதந்தார். இந்தவகை நிலைநேர இடைக்காலத் தேவிரித்த பொந்துகளாய் உளங்கொண்டார் பொதிந்தமைக்கே

இதுகேண்மின்: # 07

'ஆசுகவிக் கெனையன்றி யாருளரென் றேநிமிர்ந்தே வீசுகவி யாம்காள மேகத்தை நாமறிவோம்; . தேசு புகழ்ப் பெருங்கவிகுன்: தெளிவாக மறுப்பில்லை; கூசுசெயல் அவன்செய்தால் கூறுவமோ புகழென்றே? |08

70