பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

கவிதைத் தொகுப்பில் பெரும்பகுதி தமிழ்மொழி பற்றியது. தமிழினம் பற்றியது. பொதுவாகத் தமிழர்கள் மற்ற எந்த இனத்தையும் விடச் சற்று அதிகமாகவே பழம் பெருமை பேசும் இயல்புடையவர்களாகக் காட்சி தரு கிறார்கள். அதற்கான காரணம் இன்றைய நிலை பெரு மைப்படத்தக்கதாக இல்லாததுதானோ எள்ற ஐயம் எழு கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில்,

"ஏட்டிலுள்ள தமிழரினால் எக்களித்த தென்னுள்ளம்

நாட்டிலுள்ள தமிழரினால் நாணமதே தோன்றிற்று.”

என்கிறார். பாரதி. கூறியது போல நாம் இன்று மறை வாகப் பழங்கதைகள் பேசவில்லை. மன்றமேறிப் பேசு கிறோம்; மன்றமெல்லாம் இதையே பேசுகிறோம்; நமது தாழ்வுக்கு நாம் பொறுப்பேற்காது யார் யாரையோ காரணமாக்கி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்;

தமிழ்க் கவிதை உலகில் பாட்டாளியும், முதலாளியும் முக்கியமான பாடு பொருள்கள். புரட்சி வருவதாகவும் புது யுகம் மலர்வதாகவும் நமது கவிஞர்கள் பல நான்க் ளாக எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இடி யும் மின்னலும் எரிமலையும் நெருப்பும் எழுதுபவர் வார்த்தைகளில் இருக்கின்றன. அவர்கள் இதயத்தில் அப்படி எதுவும் இடம்பெற்றதற்கான உணர்வுகளைக் கவிதையில் காண இயலவில்லை. பேசும் பொருள் பற்றிய ஆழ்ந்த அறிவும், பேச்சில் உண்மையுமில்லாது காலத்துக் கேற்ற கோலம் பூண்டவர்களின் இலக்கியப் படைப் பாகவே பெரும்பாலும் இவை இருந்துவிட்டன. கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் அமைதியாக மே தினத்தின் அடிப்படையை, அது உலகுக்குத் தரும் செய் தியைக் கவிதையாக்குகிறார். ...

[10]