பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பேச்சிற்கும் வாய்ப்பிற்கும்
பெரும்படியாய்ப் பைந்தமிழைப் பற்றிக் கொண்டு
பூச்சிற்கும் பூசெய்க்கும்
பூரிப்பாய் வடமொழியைப் புனையக் கண்டேம்;
மூச்சிற்குள் ஒன்று வைத்து
மூக்கிற்குள் வேறுவைப்பார் முகத்தைப் பார்த்துப்
பேச்சிற்குத் தாந்தமிழர், .
பிறப்பிற்குத் தமிழரெனப் பிறங்கக் காணேம்.

189




தமிழ்க்கடவுள் முருகன் எனத்
தமிழ்ச்சான்றோர் பகர்ந்திட்டார்; தமிழ்க்குப் பொல்லார்
தமிழ்ச்சொல்லாம் முருகுவிட்டுத்
தனிப்பெயர்"சுப் பிரமணியன் தந்தார் கண்டேம்;
சிமிழ்ப்பொருளாம் நல்லபிரா
மணனென்றே தமிழ்க்கடவுள் சிதைத்தல் நன்றோ
கமழ்பொருளாம் மொழிமாறின்
வழிமாறும், பழியேறும்; உணர்வார் காணேம்.

190

111