பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பொதுத்தொண்டு மனநிறைவாம்;

புகழ்சேர்ந்தால் பொறாமையினார் பொல்லாங்

கேற்றி வெதுப்புற்றே குறைசொல்வார்;

'விளம்புகுறை எம்மிடத்து விளைவோ என்று

மதிப்பிட்டுத் தள்ளலுடன்

வெற்றுரைகள் மறத்தலினால் அமைதி கண்டேம்;

குதிப்பிட்டுப் பழிசொல்வார் -

குணக்கேட்டைக் குணமறிந்தார் கொள்ளல்

கானேம்.

209 தமிழ்பயிற்றப் பயின்றவர்தாம்

தம்திறத்தால், தகுபண்பால் தம்கால் ஊன்றிக் கமழ் புகழ்சேர் வாழ்வுற்றுக்

கவினுறுதல் காணுங்கால் களிப்பே கண்டேம்; 'தமிழ் கற்றோர்; தகவுடையார்,

தமிழ்ப்பகைக்குத் துணைபோகார், தமிழ்வ

ளர்ப்பார், தமிழினத்திற் குழைத்திடுவார்,

தவறுசெயார் எனும்பயன்போல் தழைப்பைக்

கானேம் 2| 0

| 2 |