பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

வள்ளுவ னார் இளங்கோ - கபிலர்

பரணர் சாத்தனாரை அள்ளித்தன் செல்வங்களாய்ச் - செந்தமிழ்

அனைத்து நிற்பதுகாண்!

330

வீரத்திற் குச்சேரன் - செந்தமிழ்

வளர்த்த பாண்டியனை, சாரப் புகழினுக்கும் - சோழனைச் சாற்றி மகிழ்வதுகாண்

. 33|

துலக்கும் மொழிவரம்பில் - செந்தமிழ் 'தொல்காப் பிய'த்ததுகாண்:

இலக்கண நூலதுகாண் - அதற்குள் இலக்கியம், மிளிர்ந்திடுங்காண்!

332

'பத்துப்பாட் டெட்டுத்தொகை - பதினெண்

கீழ்க்கணக் கெனும் ஒளிசேர் முத்தணி, பட்டுடையால் - செந்தமிழ் முறுவல் கொள்வது காண்!

333

| 70