பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

48. நெடுநல்வாடை

முத்துப்பல் வரிசையது முறுவலிக்குந் தமிழ்த்தாய்க்குப் பத்துப்பாட் டதன்பாங்கில் பகர்ஏழாம் பாட்டதுவாய்த் தலையாலங் கானத்துச் செருவென்றான் நெடுஞ்செழியன்

தலைவன்என நூற்றெண்பத் தெட்டடிகொள் அகவலதாய்க் கொடுமைதவழ் வாடையதைக் குளிர்தென்றல் போற்காட்டி 'நெடுநல்வா டை'என்றே நிலைநாட்டும் நக்கீர!

- தரவு

தென்றல்வளர் இளவேனில்

தொடுத்தெடுத்துப் பாடாமல்

குன்றதையுங் குளிரவைக்குங்

கொடுவாடை புனைந்தனைகாண்;

நன்றிருக்கும் பொருளிருக்க

நலிவுதரும் பொருள்பாடித் தொன்றுதொட்டுப் புகழ்நட்ட

துணி திறமை என்னென்பேன்;

194