பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

கவிதைகள்

திறனாய்வு முன்னுரை

முனைவர் மு. தமிழ்க்குடிமகன்’

நூல் அமைப்பு

சிறந்த கவிஞர் எனும் முத்திரையோடு திகழும் கவிஞர்கோ இளஞ்சேரன் தமது பழைய கவிதைகளையும் புதிய கவிதைகளோடு சேர்த்துப் பிணைத்துத் தொகுத் துள்ளார். அறுநூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள். "ஒருவர் பாடிய உதிரித் தொகுப்பு' எனும் வரிசையில் அடங்கும் இந்த நூல் பெரிய தொகுப்புத்தான். இந்த அளவுக்கு மிகப்பெரிய தொகுப்பை வெளியிட்டவர்கள் கடந்த காலத்தில் ஒரிருவரே ஆவர்.

நூலின் பகுப்புகட்கென்று தலைப்புக் கொடுத்து அதற்குப் பொருத்தமான குறளைத் தந்திருப்பது மட்டு மன்றிக் குறளுக்குப் பொருத்தமான விளக்கங்களை அளிக்கும் முறையிலும் பல கவிதைகளை அமைத்துள்ளார்; இயற்றியுள்ளார். -

'கண்ணுள்ளார் காத லவராக .

நெஞ்சத்தார் காத லவராக 'த் தலைவி நடந்துகொண்ட பாங்கு கதையாக விரிகின்றது.

  • முதல்வர், யாதவர் கல்லூரி, மதுரை.

(251