பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் -

பொதுவில் வாழ்வியலை அடையாளங் காட்டும். இவை ஒர்ந்து உணரத் தக்கவை' என்பேன்.

பாக்களில் பூக்களை வைத்தால் (பக்கம். 274) கவிதைக் களத்தில் ஒர் ஆய்வுப் பூங்கா. மொழிக் கருத்துக் கள் என் எஃகுக் கருத்துக்கள். கவிதை நாடியில் பகுத் தறிவு தான் குருதியோட்டம் தமிழுணர்வு தான் நாளம்

கடன் அறி காட்சியவர் (பக். 287) தலைப்பில் புகழுடம்பெய்திய சான்றோர். பதினைவர், அன்னார் புகழுடம்பு எய்திய கால வரிசையில் மனங்குவித்துப் போற்றப்பட்டுள்ளனர். -

கவிஞர் வா. செ. குழந்தைசாமி அவர்களது அணிந் துரை இந்நூலின் வைர அணி. முனைவர் ச. அகத்திய லிங்கனார் அணிந்துரை மாணிக்க அறிமுகம். முனைவர் மு. தமிழ்க்குடிமகனார் 'திறனாய்வு முன்னுரை' கவிதைப் பேழையைத் திறக்கும் பொன் திறவுகோல். உண்மை கூறிய இப்பெருந்தகை நண்பர்கட்கு மூச்சுக்குமேலும் முழுக் கடப்பாடுடையேன்.

தான் பெற்ற உணர்வுப் பயன்களை வையத்தார் பெறவேண்டும்; ஊறிய கருத்துக்களை உணர்த்தாமல் விடக் கூடாது; தமிழ் தலைகீழாகக் கூடாது; தமிழினம் மட்டுமன்று, மாந்தரினமும் பண்பில் திகழ வேண்டும்’ என்பனவற்றிற்காகவே இக்கவிதைகள் சுரந்தன.

"கலைக்குடில்’ [9-11

ஒ-ம். கோவை. Es 受 20, மருத்துவக் கல்லூரிச் சாலை, இளஞ்சேரன் தஞ்சாவூர். - -

[24]