பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

56. கவிதைக் குமரி.

செஞ்சொல்லே பஞ்சுடலாய்ச் செழும்யாப்பே

உயிரதுவாய், அஞ்சுவையும் அருநயமும் அழகாடை மேகலையாய்ப்

பொன்னன்ன நுண்பொருளே பெண்மைகொள்

கன்னிமையாய்த் துன்னுஞ்சொல் பொருளணியே துலங்குகின்ற

- அணிகலனாய்க் கொஞ்சுமொழி பண்ணதுவாய்க் கொள்கவிதைப்

s பெயர்கொண்டென் நெஞ்சமெனும் கலையரங்கில் நிலைத்தாடும் குமரீ,கேள்! - தரவு

சொல்லடுக்கி வரியமைத்துச்

சொல்லிடுவார் நீ, என்றே: கல்லடுக்கும் கொத்தன்செய்

கலையறிந்தார் இவர்சில்லோர்.

உள்ளுணர்வைப் பிறமொழிகொண்

டுருச்சமைத்தே நீ,என்பார்; கள்ளுண்போன் நஞ்சுண்ணும்

கழிசெயல்கொள் இவர்சில்லோர்.

237