பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

எ. வாழ்த்தாய் நறுநாவே!

வாழ்த்துதும் வாழ்த்தி வணங்குதும் நந்தமிழ் வாழ்த்துதும் வாழ்த்தி வளர்க்குதும் என்று நீ

வாழ்த்தாய் நறுநாவே! வாழ்ந்த நம் தாய்மொழி வாழ்வியல் சீர்மொழி வான்புகழ்ச் சீரொடு

வாழ்'கென வாழ்த்திடு வாய்!

447

கீழ்கதிர்ப் Gu@T6ಗೆ, ஆழ்கடல் தேர்வளம், வீழ்கணித் தேன்சுவை, வாள்தரும் கூர்திறம், யாழ்தரும் சீரிசை யாவுமாம் தீந்தமிழ் ‘வாழ்வகை ஈ'கென வாழ்த்தாய்! இடர்னலாம்

ஆழ்கென வீழ்த்திட லான்.

448

நந்தமிழ், பைந்தமிழ், நற்றமி ழாமென்று வந்தனை செய்வதற் கந்தநாள் தீந்தமிழ்; நொந்து பிழைமலிந் திந்தநாள் நைந்திடும் செந்தமிழ் சீர்பெறச் செந்திரு வாக்கத்தைத் தந்து நீ வாழ்த்துக தான்'

449

242