பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



கோவை. இளஞ்சேரன்


ஆடோட்டுங் கம்போடும்,
ஆள்விழுங்குங் கண்ணோடும்
மாடெனவே என்னண்டை
மண்டிவந்து - 'வாடி'என்றும்

'குட்டி'என்றும், 'காதல்'என்றும்
கும்மாளப் பேச்சிட்டுத்
தொட்டிழுக்க வந்தானே
அண்ணா,நான் - விட்டகல்லாய்(20)

பாய்ந்திங்கு சேர்ந்துன்னைப்
பார்த்துயிர்த்தேன்' என்றிட்டாள். காய்ந்தவாய் மூடாமல்
தன்னுணர்வை - மாய்த்து நின்ற

செங்கவிஞன் வேற்கண்ணான்
செவ்விதழ்கள் தாம்துடிக்கத்
‘தீக்களங்கம் சேர்ந்தமைந்த
தீயோர்கள் - ஊர்க்களத்தே

260