பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

"எண்ணெய் தடவி எழில்பெறச் சீவிடின்

எண்ணமும் எய்தும் எழில்"

"ஒட்டடைக் கம்பதை ஒக்குமே எண்ணெயைத்

தொட்டிட்டுச் சீவாத் தலை” (262, 263)

நகைச்சுவை -

கவிஞர்கோ நல்ல நகைச்சுவையாளர். பாரதி,

பாரதிதாசன் போன்றவர்கள் எத்தனையோ இடங்களில் நகைச்சுவை தோன்றப் பாடியுள்ளனர். கவிஞர்கோ' இளஞ்சேரனிடம் இத்தகைய தன்மை சிறப்பாக அமைந் துள்ளது: . -

"எள்மலர்தான் மூக்காகும்” -எனக் கூறப்பட்டதை மறுத்து,

'மூக்குப் பொடியதை முங்குவதும் அஃதே முதிர்ந்த தேனெனத் தொங்குவதும்' (78) -என்று கிண்டல் செய்கிறார்.

பிழை ஒரு கொலை' எனும் தலைப்பின்கீழ் 'எம் பெருமான் - எமபெருமான்' ஆகி நிற்பதைச் சுவை படப் பாடுகிறார். "ஆடாதழை மருந்துக்குப் பயன் படும் என்று எழுத முனைந்தவன் ஆடாதலை என்று எழுதி விட்டதால் ஒருவன் ஆற்றங்கரையில் அமர்ந்து ஆடாமல் அசையாமல் மந்திரம் ஒதியவன் தலையைக் கொய்து நாற்பத்தெண் பங்காக்கி உண்டுவிட்டான். இதை ஒரு நகைச்சுவைக் கதையாகவே வழங்கியுள்ளார்

கவிஞர் . -

கருத்துவளம்

இயல்பாகவே நல்வாழ்வும், தெளிவான பார்வையும்

I32]