பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

உழக்கில் உலகை ஒடுக்கப் பார்த்தனர். முழக்கில் மலையாய் முடுகிய அரிமா குமுறி எழுந்தார்; திமிரி நிமிர்ந்தார்.

(15)

'பிறப்பொக்கும் எல்லா உயிர்'க்கென் றியாவரும்

உரக்கப் பேசினர்; உள்ளே ஒதுக்கினர்; தண்ணீர்ப் பானையும் தனித்தனி என்றனர்;

கண்ணிர்க் குள்ளும் கடைச்சாதி கண்டனர்;

உரைத்துப் பார்த்தார்; முறைத்துப் பார்த்தார்; பழைய குருடிதான் கதவைத் திறந்தாள். இனிப்போர்; அறப்போர்! இனிப்போர் வருக! தனிப்போர்; மடமை தனிப்போர் எழுக! அறப்போர்; சாதி அற-போர் எழுக! நெறிப்போர்; வாழ்வை நெரிப்போர் வருக! மறப்போர்; வன்செயல் மறப்போர் எழுக! நொடிப்போர்; அன்று; நொடித்தோர் உரிமை அடிப் போர் ஆயினும், அடிப்போர் அகல்க!

குடிப் போர் ஆயினும், குடிப்போர் நகர்'கெனத்

தும்பை சூடித் தொடைதட்டி எழுந்தார்;

336

(20 J

(25)

(30)