பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

என்கிறான். இது குடும்பக் கட்டுப்பாட்டுக் கோட்பாடு மட்டுமன்றி அரசின் கொள்கையாகவும் விளங்குகிறது, ஆனால், இவரது இந்த வரியுங்கூட இப்போது மாறிப் போய் விட்டது.

ஒன்றே பெறுவீர்; ஒளிமயமாய் வாழ்வீர்' எனும் அரசு விளம்ப்ரங்கள் கவிஞர் கோ' கண்ணில் பட்டிருக்கும் என்று கருதுகின்றேன். வெகுவிரைவில் பெறாதே’ என்று தடை செய்தாலும் வியப்பில்லை. .

மொழிக்கொலை செய்பவர்களைக் கடுமையாகச் சாடுகிறார். அவர்களைக் கழுத்தறுப்புக்காரர்'என்கிறார். மேலும்,

'பேச்சிற்குத் தாந்தமிழர்

பிறப்பிற்குத் தமிழரெனப் பிறங்கக் காணேம்’ என்கிறார். (189.

கழுத்தறுபுக்காரர். என்பதில் மக்கள் தமிழ் நட மாடுவதைக் காண்கிறோம். -

"கடுக்காய்கொ டுத்திட்டுக் -

காதுகுத்திக் குழிபறித்துத் துாற்றி நிற்பார்"

. (217)

என்பதிலும் பழகு தமிழ் பயின்று வருகின்றது. கீழறுப்பு எனும் சொல்லாட்சியும் இடம் பெறுகிறது'. :

இந்தியா பாக்கித்தான் - படைகளுடன் பொருத போது இந்திய வெற்றியைப் பாராட்டிக் கவிஞர்கோ பாடிய பாடலும் இத் தொகுப்பில் உள்ளது.

[36].