பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

- என்பதுதான் இவர் கனவு. இது கனவுதானா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

தெளிவு

கவிஞரைப் பொறுத்தமட்டில் இவரது கொள்கைகள் தெளிவானவை. - .

'துள்ளியெழும் புலமையுடன் துணிவுடைய சொல் லாற்றல் துணையாய்க் கொண்டவர்"; இல்லத்து விழவெல்லாம் இனத்தமிழர் தமைக் கொண்டே வெல்லத்துத் தமிழ் சொல்லிச் செய்வித்தல் தமிழர்

y

- ,芭丑一@T (608)-என்று வற்புறுத்துபவர். இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

நூலை முழுமையாகப் படிக்கவிருக்கும் சுவைஞர்களுக் காக அவற்றை விட்டுவைக்கிறேன். -

பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, கண்ண தாசன் போல இன்று நாம் எழுதும் கவிதைகள் எல்லாம் தமிழ் மக்களைத் சுண்டி இழுக்கவில்லை. அன்று அவர் கள் மட்டும் தனித்து நின்றதுதான் காரணமா? இன்று நாம் 600 இற்கு மேற்பட்ட கவிஞர்களுக்கிடையில் - கூட்டத்துக் கிடையில் நின்று கூவுவதால் குழப்பமாகி விட்டதா? அனைவரும் சேர்ந்து பாடுவதால் கூக்குரலாகி விட்டதா? அல்வது வரவர நம்தமிழ் மக்களுக்கு மரத்துப் போய்விட்டதா? எனக்கென்னவோ கவிதைகள், கட்டுரை களால் எல்லாம் நம் மக்கள் திருந்துவார்கள் என்று கருத முடியவில்லை.

[39]