பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

குமரி:

கலித்தொகையின் தனித்தலைவா! காதல் நெஞ்சில் கணிகின்ற கனிவெல்லாம் கனியே அன்றோ ? புளித்ததுண்டோ, நம்நெஞ்சம் இனித்த தன்றி ? புன்னகைப்பூ யான்பூக்கப் பூரிப் பென்னும் கொழித்தெடுத்தே மணம்விரியும் குலவு சொல்லாம் கொழுந்தேனும் வழிந்துநிற்க, உணர்வாம் தாது - களித்தொன்றக் காமமெனும் பிஞ்சும் தோன்றிக் "காதல்’எனக் காய்த்துப்பின் கனிந்த தன்றோ ?

- 25

குமரன்:

என்நெஞ்சில் உன்னுயிரே உலவக் கண்டேன்; உன்வாயில் என் நினைவே ஒலிக்கக் கண்டேன். குமரி:

என்னில்வீழ்ந் தெனையும்மில் வீழ்த்தி வைத்தீர். குமரன்:

என்விருப்பில் உன்விருப்பின் ஏற்றம் கண்டேன். குமரி:

இன்னதுவே அரிதரிதாம் கனியென் றேன், யான். குமரன்: -

இயல்வழுவாத் தமிழிசையே! இதைவி ரிப்பாய்!

18