பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

மகள்:

நெஞ்சத்தில் உறைகின்றார் அத்தான்;

நெய்யுணவைச் சூட்டுடனே உண்டால்,

பஞ்சுணவு வாய்வழியே சென்று,

படக்கென்று தொண்டையினைக் கடந்து,

நெஞ்சுவழிச் செல்லுங்கால் அவரை

நெருப்பாகச் சுடுமன்றோ தோழி!

அஞ்சுகின்றேன் அவர்வெந்து போவார்;

அன்னைக்குத் தெரியுமடி போடி!

- 40

தோழி;

9:நெஞ்சத்தார் காத லவராக, வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்'தென்னும்-செஞ்

சொல்லை அன்னாய்நீ வள்ளுவர்பால் கேட்டிருப்பாய்,

- . . அப்பொருளை முன்னாளில் அறிவாயே மூண்டு. - 4|

(அறுசீர் --- ஆசிரிய விருத்தங்கள்; இடையில் இரு நேரிசை வெண்பாக்கள்.1

27