பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தோழி:

பூக்கின்ற மூக்கதும் அப்படியாய்-பொன்னே

பூரித்த மகரந் தப்பொடியாய், மூக்குப் பொடியதை முங்குவதும் - அஃதே

முதிர்ந்த தேனெனத் தொங்குவதும் நோக்கியே கூறினள். செல்லிவண்டே-இதனை

நோக்காதே இவ்வண்டு செல்லுகண்டே 78

கவிக் கூற்று சென்றான் கிழவன் சிலசெய்து வந்திங்கு நின்றான் புகன்றான் நினைப்பு:

(குறள் வெண்பா] 79 கிழவன்:

அலர்ந்த பற்களை அழித்திட்டேன்;-உடனே

அறவே புருவம் மழித்திட்டேன்; உலர்ந்த காதலாய்ப் போகாமல்-தோழி!

உணரக் கூட்டுவாய் நோகாமல்!

தோழி:

கிளர்ந்த பற்களைக் கொட்டிவிட்டீர்;-வில்லைக்

கிட்டிய புருவம் வெட்டிவிட்டீர்; தளர்ந்த தொந்தியைத் தள்ளிடிலே-இந்தத்

சிலையினை அள்ளிடலாம். 0

8

53