பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 5 7 58 59 60 61 228 கூறுக என்ன, கூறுவாள் அவளும் : யாரும் இதுவரை இறவா வீடே எங்கும் இல்லை; ஏந்திழாய் நீயும் அங்கும் இங்கும் அலைந்து கேட்கினும் பயனே இல்லை; பகர்வேன் எம்கதை ; துயரே மிஞ்சிடத் துஞ்சினர் பல்லோர். அம்மை நோயால் அழிந்தார் ஒருவர் வெம்மைக் காய்ச்சலால் விளிந்தனர் இருவர் : கழிச்ச ல் நோயால் கழிந்தனர் மூவர் ; எழுச்சிப் போரில் இறந்தவர் நால்வர்; மாப்பல் பிணிகளால் மடிந்தவர் ஐவர் : மூப்பு முதிர் வால் முடிந்தவர் அறுவர் : 57 ஏந்திழாய் - அணிகலம் பூண்ட பெண்ணே. 58 துஞ்சின்ர்-இறந்தனர். 59 விளிந்தனர் - 60 கழிச்சல் - காலரா, எழுச்சி - துடிப்பு (மறஉணர்வு). இறந்தனர். 62 63 64 65 66 67 229 குழவி, சிறியோர், குழகர், பெரியோர், கிழவி, கிழவராம் கேளிர் பல்லோர் ஈண்டு மடிந்தனர்; எனவே, எங்கும் மாண்டவர் இல்லா மனையே இல்லை. மீண்டு செல்கென மென்மையாய் உரைக்க, ஆண்டை அகன்றே அயலொரு மனையை அடைந்து கேட்க, அங்குளாள் ஒருத்தி நடந்த நிகழ்வெலாம் நன்கு புரிந்து, வியப்பு மீக் கூர விளம்புவாள் : மகனும் உயப்பெற வேண்டி . உழலும் நங்காய்! பிறந்தவர் மிக்க பெருமை ய ராயினும் இறந்தே தீர்வர் ; இதில்விலக் கில்லை. ੋ62 குழகர் - இளைஞர்; கேளிர் = உறவினர். 64 ஆணடை - அவ்விடத்தை. 65 நிகழ்வு - நிகழ்ச்சி. 66 மீக் கூர்தல் - மிகுதியாதல்; நங்காய் - நங்கையே.