பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சிறந்திடு முறையில் மக்கள், செல்வனின் பிறந்த நாளை நிறைந்திடும் உவகை யோடு நெடிதுகொண் டாடி னரே. (வேறு) 2 தெருவெல்லாம் முத்துப் பந்தர், திகழும்பல் தோர ணங்கள், மருவியநல் வாயில் தோறும் மாவாழை, தெங்கின் காய்கள், விரவுறுமங் கலக்கு டங்கள், விளங்கு மணி பொதிவி ளக்கு, திருவளரந் நாடு முற்றும் திரள் திரளாய்த் திகழ்ந்த மாதோ! (வேறு ஆசிரியப்பா) 1 கோவில் பூசனை, குளிர்சுனை யாடல், காவில் விருந்து, கவர்பல் கலைவிழா, அறிஞர் மன்றத்து ஆய்சொற் பொழிவு, வறிஞர் பசிக்கு வளமார் உணவு, மறைவல் லோர்க்கு மாண்புறு பரிசுகள், சிறையுள் ளோர்க்குச் செல்லும் விடுதலை, கோழி குறும்பூழ் கொழுதகர் பகையை வீழச் செய்யும் வெற்றிப் போர்கள், ஆடல் போர், பல் லாட்டப் போர்கள், 10 பாடல் போரொடு பல்லி யங் களின்போர் . மன்னு நாடே மகிழ இன்ன பலவும் இடம்பெற் றனவே! 5 அடி 2 ಆr-Ggrಒ), 7 குறும்பம் - ஒருவகைப் பறவை (காடை); தகர் - ஆடு, 10 பல் இயங்கள் - பலவகை வாத்தியங்கள். 11. மன்னுதல் - நிலைபெற்றிருத்தல். இன்ன - இத்தகையன. 21 பெயர் சூட்டு விழா (வேறு) சுத்தோத னன்பெயர் சூட் டுவிழாக் கொண்டு சொலற்கரிய நற்கோள்கள் சூழ்நே ரத்தில் சித்தார்த்தன் என்ருலே தித்தித் தீர்க்கும் திருப்பெயர்தான் திருமகற்குச் சூட்டி ளுனே. சர்வார்த்த சித்தனெனச் சாற்றும் பேரும் சால்புடனே வழங்கிடுவர் சான்ருேர் பல்லோர். ‘விர்விர்’ எனச் சுருக்கமாக அழைக்க வேண்டி விழைவுமிகச் சித்தன்'என்றும் விளம்பு வாரே. அசித முனி வருகை (வேறு - ஆசிரியப்பா) 1 கசியும் அன்பொடு மகவைக் காண அசிதர் எனுமுனி அரண்மனை அடைந்தார். அரசன் முனிவரின் அடிமலர் வீழ்ந்து பரசிப் பணிவுரை பகர்ந்து நின்ருன். நோக்கினார்; 2 குழந்தையை முனிவர் கூர்ந்து குழைந்து மகவின் கணிப்பும் குறித்தார்; விழைந்து வாழ்த்தி விளம்ப லானார்: இந்தக் குழவி எளிய மகனலன்; வந்தனன் தரைக்கு வானின்று இறங்கி. 5 10 இவன் பிறந் திடவே ஈண்டு நீ என்ன தவம்புரிந் தனையோ? தனிப்பே றுடையை! பாடல் ஈர்த்தல் - கவர்ந்து இழுத்தல். பாடல் • 2. சாற்றுதல் - சொல்லுதல்; விர்விர்' - விரைவுக் குறிப்பு ஒலி; விழைவு - விருப்பம்: விளம்புதல் - சொல்லுதல், அடி 4 பரசுதல் - துதித்தல்; பகர்தல் - சொல்லுதல். 11 பேறு - பாக்கியம்.