பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 30 35 40 32 - காய்ந்து பக்குவம் செய்யப் பெற்ற பு 284 சந்தன் விருந்து பண்ட காமா, அத்தி காமா, அம்ப காமா, சம்பு காமா, போகம்- முதலிய பொன்னர் நகர்களைப் பகவர் கடந்து பாவா’ அடைந்து சந்தன் என்னும் சால்புறு அன்பனின் மாந்தோப் பதனில் மகிழ்ந்து தங்கினர். ஆங்கே, விருந்து தந்திடச் சந்தன் விடுத்த வேண்டு கோளை விரும்பி ஏற்றே ஈண்டும் குழுவுடன் ஏந்தல் சென்ருர், விருந்தில் பொங்கல், விதவித உண்டிகள் அருந்த வைத்த தன்றிப் பன்றியின் உலர்ந்த இறைச்சி உணவும் வைத்தான். புலாலைக் குழுவினர் புசிக்கலா காதென ஆணே யிட்டபின், ஐயர் மட்டும் அவ் ஆனைச் சிறிதே உண்டுசந் தனுக்கு நெஞ்சி லேகுறை நிலவாது செய்தார். 'பெயக் கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' - என்பது மெய்யே. 25 பொன்ஆர் - பொன்போன்ற, அழகு பொருந்திய, ஈண்டும் - நெருங்கிக் கூடியுள்ள 35 உலர்ந்த இறைச்சி லால், 38 ஊன் - மாமிசம். 40-41 இந்த இரண்டு அடிகளும் (580 ஆம்) திருக் குறளாகும்; இதன் பொருள் - எவரும் விரும்பும்படியான கண்ளுேட்டம் என்னும் நாகரிகத்தை விரும்புபவர், ஒருவர் நஞ்சை ஊற்றித் தர் நேரில் பார்த்தாலும், அவரை மகிழ் விப்பதற்காக ஆந்நஞ்சை அருந்திஆ அமைதி, கொள் வர் - என்பதாம். 285 பின்னர்அவ் ஆனைப் பிறர் உணு வாறு மண்ணிலே புதைத்து மறைக்கச் செய்தார். ஏந்தல் வாழ்வில் இறுதியாய் ச் சிறக்க 45 மாந்திய பெருமை மன்னியது இஃதே! பன்றி இறைச்சியைப் பகவர் உண்டபின் துன்றியது வயிற்றுக் கடுப்பு எனும் நோயே. எதனால் வந்ததென் றறியா விடினும் இதஞல் வந்த தாகவே இயம்புவர். 50 உற்ற இந் நோயைச் சந்தன் உட்பட. மற்றவர் அறியா வண்ணம் மறைத்தார். இறுதியாய், இரணிய வதி"க்கரை இருக்கும் 'குசிநா கரா'நகர் குறுக லானர். அப்போ தகவை எண்பதா யிற்றே. 55 போகும் வழியில் புக்குசா என்பவர் பொன்னுடை போர்த்திப் போற்றி வணங்கினர். பொன்னுடை பெரிதும் பொலிவு பெற்றதே. - - . فقضى - 42 ஆதவறு - உண்ணுதபடி 45 மாந்திய - உண்ட இஃதே பெருமை மன்னியது சந்தன் அளித்த விருந்துணவே பெருமை பெற்றது. 47 வயிற்றுக் கடுப்பு - சீதபேதி. 49 இதனுல் பன்றி இறைச்சி உண்ட இச்செயலால். 52 இரண்யவதி - ஓர் ஆற்றின் பெயர். 53 குசீநாகரா - ஒரு நகரின் பெயர். 5 புக்குசா - ஒர் அன்பர். 57 புத்தர் அணிந்ததால் பொன் உட்ை பொலிவு பெற்றது. குறிப்பு:- புத்தர் பன்றி இறைச்சி உண்ண வில்லை: பன்றி இறைச்சி போன்ற மென்மையான ஒரு ஆகைக் காளான் உணவை எண்டதாகவே பாலி மொழி யில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது: அதை மொழி பெயர்த்தவர்கள், பன்றி இறைச்சி உண்டதாகத் தவருக மொழிபெயர்த்துவிட்டிருக்கக் கூடும் என்பதான ஒரு ¿(5¿¿, “Buddha Mimamsa” (l.13; 3) மீமாம்சா) என்னும் ஆங்கில நூலில் குறிப்பிடப்பட் டுள்ளது.