பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வறுத்த பனிப்பயறாய் மாஞ்சி முளைச்ச கண்ணே இடிஞ்ச மதில் எழுப்பி இருபுறமும் தூண் நிறுத்தி குறைஞ்ச மதிலுக்குக் கொடியேற்ற வந்த கண்ணே இன்னே உறங்குறங்கு இனிப் பளிப்போம் நீ உறங்கு ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ! 5 அடித்தாரைச் சொல்லி ها) گی( ஆணைகள் இட்டிடுவோம். தொட்டாரைச் சொல்லி அழு தொழு விலங்கு பூட்டிடுவோம். அத்தை உன்னை அடித்தாளா அலரிப்பூச் செண்டாலே, மாமன் உன்னை அடித்தானா மல்லிகைப் பூச் செண்டாலே. ஆரும் அடிக்க வில்லை அங்கொருவர் தீண்ட வில்லை. தானே நீ அழுகிறாயோ தாயாரைக் காணாமல். நைந்து நீ அழுகி றாயோ நற்ருயைக் காணாமல். ஏழாம் நாளிலேயே என்னைத் தவிக்க விட்டுப் போய் விட்டாள் தாய் என்று பொங்கி அழுகிறாயோ. நாங்கள் துணை இருக்கின்றோம் 4 இன்னே - இப்பொழுதே. 5 நற்றாய் - பெற்ற தாய் 25 நல்ல முத்தே அழாதே நீ தீங்கு ஒன்றும் நேராது தெள்ளமுதே கண் வளராய். ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ! ஆரரிரோ ஆராரோ ஆராரோ ஆரரிரோ! (வேறு) 6 இன்ன வளர்க்கும் தாயர் இரங்கிப் பாடும் வண்ணம், அன்னை மாயா தேவி, ஆணி முத்தை ஈந்த வண்ணச் சிப்பி போல மகiன் றவேழாம் நாளே மன்ன உலகு நீத்து மாண்டு தெய்வ மானாள். (வேறு) நாள் பல கடந்து நாற்பத் தைந் தெனும் அகவை நண்ண வாள்விழி பேறு காலம் வாய்த்ததால் ந்திட் டாளோ! 7 8 மன்னவற் கடுத்து வாய்த்த மனை'கவு தமிப்பேர் நல்லாள் மன்னியே மகவைக் காப்பாள் என்று தாய் மாண்டிட் டாளோ! 6 இன்ன - இத்தகைய செய்திகள்; ஆணிமுத்து - ஒருவகை உயர்ந்த் முத்து; மன்ன - நிலையில்லாத நீத்தல் - பிரிதல். பாடல் 7 அகவை - வியது; வாள் விழி - வாள் போலும் விழி உடைய மாயா தேவி (அன்மொழித் தொகை). பாடல்8 அடுத்து வாய்த்த மனை.- இரண்டாம் தாரம். மனை - மனைவி; கவுதமி - அரசியின் பெயர்.