பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 (வேறு ஆசிரியப்பா) 1 இன்பம் இன்பம் இன்பத் தின் பின் துன்பம் துன்பம் தொடரும் துன்பம் என்று பல்லோர் இயும்புவ துண்மையோ! என்று வேந்தன் ஏங்கித் தவித்தான். 5. மெல்லிசை கேட்டு மேவிய அசுணம் வல்லிசை கேட்டு வாடுதல் நிகர மகனைப் பெற்று மகிழ்ச்சியில் ஆழ்நதவன் மனைவியை இழந்து மயங்கி உழந்தான் அழுங்கும் அரசை அறிஞர் தேற்றி 10 ஒழுங்கு செய்தனர் ஒருவா ருக. மகனைக் காணும் மகிழ்ச்சியால் மயக்கம் சிறிது சிறிதாய் மறைந்ததே : వౌడౌజెē வந்த 6 நிகர - ஒப்ப. 8 உழத் தல் விருத்தல் 9 அழுங்குதல் - துன்புறுதல் - அழுத்ல். 4. பல்வகைப் படிப்பினை படிந்த காதை கலை-கல்வி 1 காவலன் மதலை கல்வி கற்றிடும் பருவம் எய்த, தாவிலா ஆசாற் கொண்டு தக்க பல் கலை நூல் யாவும் ஆவலாய்க் கற்கச் செய்ய, அவன்றன அனைத்துப் பண்பும் பூவிலார் மணமே போலப் பொருந்தின கல்வி யோடு. 2 மன்னரின் குலத்திற் கேற்ப மாவொடு யானை ஏற்றம் துன்னரு தேரில் ஏற்றம் துளங்குபல் படைப்ப யிற்சி இன்னை பலவும் மன்னன் இனியதன் மகற்கு நல்க முன்னியும் அவற்றில் உள்ளம் முற்றிலும் தோய்ந்தான் இல்லை. 3 இன்ன பல் படைப்ப யிற்சி என க்கு நீர் ஈவ தேனே? காவலன் - அரசன்; மதலே - பிள்ளை; கற்றிடும் பருவம் எட்டாம் அகவையில் கல்வி கற்பிக்கத் தொடங்கியதாகக் கூறுகின்றனர். தா-வழு, குற்ைபாடு: ஆசாற் கொண்டு - ஆசானேக் (ஆசிரியனைக்) கொண்டு; பூவில் ஆர் - ஆர்தல்:துறைதல். 2. பகா - குதிரை; துன்னரு- துன்ன அரிய்;. அடைதற்கு அரிய, துளங்குதல், - விளங்குதல்;. முன்து தில் தினத்தல்,