பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 14 பின்னர், நீற்றை 15 ம க தம் முதல் எழு நாட்டு மன்னர் தகுதி சார் தமக்குத் தரும்படி கேட்க, 16 குசீயின் தலைவர்கள் கொடுக்க மறுத்தனர் : இசையச் செய்ய ஏற்பா டொன்று 17 செய்யப் பெற்றபின் செவ்வனே இசைந்தனர். வைய மாந் தரெ லாம் வணங்கும் படியா ய் 18 எட்டுக் குடங்களில் இட்டு நீற்றை எட்டுமன் னர்க்கும் ஒவ்வொன்று ஈதலே 19 அந்த ஏற் பாடாம். அதன்பின் எண் மரும் தந்த பொற் குடத்தைத் தத்தம் நகர் க்குக் 20 கொண்டு சென்று குழியில் புதைத்து, கண்டு வணங்கக் கடவுட் கோயில் 15 மகதம் முதலிய ஏழுநாட்டு மன்னர்கள் நீற்றை த் தமக்குத் தரும்படி கேட்டனர். 19 எண்மர் - எட்டு மன்னர்கள். 297 21 எடுத்தனர் மேலே உலகோர் ஏத்தவே. அடுத்தனர் மக்கள் ஐயரைத் தொழவே. 2 2 மாந்தராம் புத்தர் மன்னும் தெய்வமாய் வாய்ந்த உண்மை வரலாறு இஃதே. சுற்றுலாப் பகுதிகள் : 23 பேதறு புத்தர் பிறந்த கபிலையும் போதம் பெற்ற புத்த கயையும் 24 அறிவாழி உருட்டிய அருள்சா ரநாத்தும் அறவே அமைதி அடைந்த குசியும் 25 பல கொள்கை கொண்டு பரந்து கிடக்கும் உலகைச் சுற்றி உலாவரும் மக்கள் 26 அலகில் மகிழ்வொடு அடைந்து போற்ற இலகும் பதிகளாய் எழில் பெற் றுளவே. நிற்க, 23 பேதுஅறு - உலகமயக்கம் அற்ற 24. அறவே - முற்றிலும்; அழைதி சமாதி நிலை - அமைதியான இறப்பு. இலகும் பதிகள் - விளங்கும் திரு இடங்கள்.