பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வேறு 1 வன்புறு பற்று நீங்கி வயங்கிடும் துறவி யர்போல், துன்பறு இசை, நற் கூத்து, துளங்குபல் கலைநி கழ்ச்சி, அன்புளம் கொண்டு மிக்க அழகிய மடவார் சூழ இன்பமாய்ப் பொழுது போக்கல் எதையுமே மைந்தன் நாடான், அடிக்கடி தனியி டத்தில் அமருவான் ஆழ எண்ணி; வடித்திடும் கண்கள் நீரை, வாடுமெல் வுயிரும் கண்டு; வெடித்திடும் துயரால் உள்ளம், வேறுயிர் பசிக்கப் பார்த்து ; துடித்திடும் உடம்பு, நோயால் துன்புறு வோரை நோக்கி. 3 அரண்மனை வாழ்வோர் யாரும் அரற்றிடப் பொறுக்க மாட்டான்; அரண்மனை ஆர வாரம் அனைத்திலும் ஆர்வம் காட்டான்; அரண்மனை அடிமை கட்கும் அன்பொடு வணக்கம் சொல்வான். முரண்படும் செயல்கள் கண்டால் மூழ்குவான் துயரில் ஆழ்ந்தே. 2 பாடல் 1 வன்புறு - வன்பு உறு - தீமை மிக்க; பற்று - உலக ஆசை, வயங்குதல் - விளங்குதல்; துன்பறு: துன்பு அறு - துன்பம் போக்குகிற; கூத்து -நடனம் - நாடகம். மடவார்- பெண்கள், 3_அரற்றுதல்- அமுதல், வருந்துதல்; முரண்ப்டும் ஒவ்வாத, மாறுபட்ட, பகை கொண்ட். 41 (வேறு) நேரிசை வெண்பா தந்தைசுத் தோதனன் தக்க பலசெய்தும் மைந்தன் உறுதியோ மாறிலது - முந்தையோர் பெற்றவுளம் பித்தென்றும் பிள்ளேயுளம் கல்லென்றும் சொற்றது.விண் போகுமோ சொல். ് ഫെബ് 1 தக்க - தகுந்த வழிகள் (உபாயங்கள்); 2 முந்தையோர் - முன்ன்ோர்; 4 சொற்றது - சொன்ன இழ்மொழி. .