பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது மத நூல் அன்று:

  • ಗ್ಗಿ! மதத்தவனாகிய - சிறப்பாக இந்து

மதத்தின் ஒரு ரிவாகிய சைவ சமயத்தவனாகிய அடி யேன், மதச் சார்புடையதாகக் கருதிப் புத்தர் வர லாற்றைக் காப்பியமாக இயற்றவில்லை. புத்தர் ஒரு சமூகச் சீர்திருத்த வாதி என்ற நம்பிக்கையில் - ஒரு 鷺 சீர்திருத்த நூ~~ வே இந்நூலைப் படைத்துள் 6mr6Ñr. கிறித்தவ மதத்தைச் சேர்ந்த மேலைநாட்டினர் சிலரும், இந்து, மதத்தைச் சேர்ந்தவரும் அந்தணர் குலத்தவரும் முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவரும் ஆகிய டாக்டர் சர்வ, பள்ளி, இராதா கிருஷ்ணன். அவர்களும், இந்து மதத் தேவரும் அந்தணர் குலத்தவரும் ஆகிய ட்ாக்ட்ர் உ.வ்ே. ‘சாமிநாத ஐயர் அவர்களும், இந்து மதத்தவராகிய தவிழணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களும், இன்ன பிற்ரும், புத்தரைப்ப்ற்றி-புத்தரின் வரலாற்றைப் பற்றி எழுதியது மத அடிப்படையில் அன்று; மக்கள் குல வாழ்க்கைத் தத்துவத்தின் அடிப்பட்ையிலும் சமூகச் சீர் 'திருத்த்ப் பண்ரியின் ஆடிப்படையிலுமே அவ்ர்கள் எழுதி யுள்ள்ன்ர்: அடியேனும் அந்த அடிப்பன்ட்யிலேயே இந்துள்லை’ யாத்துள்ளேன். ஏசு பெருமான், முகமது நபி முதலிய அருளாளர்களை எந்த அடிப்படையில் எல்லா மதத்தினரும் பெர்துவாகப் போற்றுகிறார்களோ-அத்தகைய அடிப் படையிலேயே என்து நூலும் இயற்றப் பெற்றுள்ளது. எனவே, மதக் காழ்ப்புக்கு இங்கே துளிப்பும் இடமில்லை. இது மத நூல் அன்று-அன்று. நாட்டு நடப்பு: 1984 ஆம் ஆண்டு இயற்றப் பெற்ற இந்த நூலை வெளியிடப் பண வசதி. யில்லை. பதிப்பகத்தார்கள் உட். படிப் பலதுறைகளேச் சேர்ந்த பதின்ொருவரின் (11பேரின்). உதவி-ஒத்துழைப்பைநாடினேன்; கிடைக்கவில்லை. இந்த நிலையில், எனக்குப் பழைய நினைவு ஒன்று வந்தது: . 1953 ஆம் ஆண்டு தமிழ் அகராதிக் கலை’ என்னும் அரிய நூல்ை எழுதினேன்.வெளியிட்ப் பலர் உதவியை 7 நாடினேன்-கிடைத்திலது. பின்னர் என் மனவியின் உதவி யை நாடினேன்; ஒரு நகை கிடைத்தது. நூல் 1965 ஆடி ஆண்டு வெளி யாயிற்று. அந்த நூலுக்குப் பெரும் புகழும் அரசின் பரிசும் பாராட்டிதழ்களும் பொன்னாடைகளும் கிடைத்தன. தமிழ் M.A. தேர்வுக்கும் புலவர் தேர்வுக்கும் அந்நூல் பாட நூலாகவும் ஆக்கப் பெற்றது. அந்த நினைவு இப்போது வந்தது. . . . . திருமணம் செய்து கொடுக்கவேண்டிய மகளுக்கு நகை செய்யாமல், நூல்களை அச்சிட்டு அடுக்கி_வுைத்திருத் கிறேன்-என்பதாக, என்மேல் என் குடும்பத்தினர் சுமத் தும் குறை பல ஆண்டுகளாக உண்டு. இருப்பினும், இப் போதும் என் மனைவியின் உதவியை நாடினேன். ஒரு நதை தரப்பெற்றது. நூல் இப்பொழுது வெளிவருகிறது.நாட்டு நடப்பு நிலையை அறிவிக்க இதைக் குறிப்பிட்டேன். இந்நூலுக்கும் தமிழ் அறிந்த மக்களின் பேருதவி யும் 醬 கிடைக்குமென நம்புகிறேன். கருத்துரை வழங்கியவர்க்கும், இந்நூலை நன்முறையில் விரைந்து அச்சிட்டுத் தந்த அண்ணாமலை நுகர்.கே.பி.டி. அச்சக்த்தார்க்கும் மிக்க நன்றி செலுத்துகிறேன். வணக்கம். கந்தர சண்முகன