பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவுதமப் புத்தர் காப்பியம் 1.அரசனும் அரசியும் நோற்ற காதை 1 உலகத்தில் நனியுயர்ந்த ஓங்கல் என்னும் உயர்பெருமை உற்றமலை இமயம் ஆகும்; அலகில்சீர் ஆர்ந்திடுமம் மலையில் தோன்றும் ஆறுகளுள் நலஞ்செறிந்த ஆறு கங்கை; இலகுகங்கை தங் கையென இயம்பும் வண்ணம் இன்வளம்மன் னு கிளை உரோ கினிப்பேர் ஆறாம்; பலகாலால் நீர் நிறையில் வாற்றின் பாங்கர்ப் பயன்தருமோர் பைந்நகரம் கபில வாத்து. 2 பொன்னகராம் இதன் பெருமை புகலற் பாற்றோ ! பூவுலக முழுதுமிதன் பெயர் போ யித்தே ! இந்நகரில் சாக்கியப்பேர் மரபில் தோன்றி இனிதாள்வான் எழில்சுத்தோ தனனாம் வேந்தன். மன்னுடிகழ் மன்னவற்கு மனையாய் உற்றாள் மாபெருஞ்சீர் மாண்பினளாம் மாயா தேவி. தன்னிகரில் அரண்மனையோ தழைத்துச் சீர்த்தும் தவழ்ந்திடவே ஒரு மகவு தானங்கில்லை. 1 ஒங்கல் - மலை; சீர் - சிறப்பு: இலகுதல் - விளங் குதல்; கங்கை தங்கை - கங்கையின் தங்கை; இயம்புத் ல் - சொல்லுதல்; வளம் மன்னுதல் - வளம் மிகுதல்; உரோகிணி - ஒர் ஆறு; பல காலால் - பல கால்வாய்களின் வழியாக ; பாங்கர் - பக்கம்; பைந் நகரம் - பசுமையான நகரம் ; கபில வாத்து - கபில வாஸ்து (கபிலை). 2 புகல ற் பாற்றோ ? சொல்லி முடியத்தக்கதோ?; எழில் - அழகு ; மனேயாய்-மனைவியாய்; தழைத்து - எல்லா வளமும் வாழ் வும் பெருகி; சீர்த்தும் - சிறப்புற்றிருந்தும்; மகவு -.குழந்தை. 13 3 வெண்ணிலவு தோன்றாத இரவில் விண்னும் விளங்கிடுமோ? வியனுலகம் இருளில் மூழ்கும். வண்ணமிகப் பெற்றிட்ட வனப்பார் பூவும் வளவியநன் மணமிலதேல் மதிப்பே இல்லை. கண்ணிருந்தும் ஒளியிலதேல் காண்ப தெங்கன்? காசிருந்தும் ஈகையிலான் கயவன் அன்றோ? மண்ணிடநீர் இல்லாத மடுவே போல மகவில்லா மனையதனில் மகிழ்ச்சி உண்டோ ? கணிப்பு காணல் (வேறு-ஆசிரியப்பா) 1 மணியின் சிறந்த"கண் மணி'பெறா மன்னன் கணியனே அழைத்துத் தன் கணிப்பு காட்டினான். கோள்கள் அமைந்து ள குறிப்பு பற்றி - நூல்கள் துவலும் நுட்பம் நுணுகி ஒர்ந்து கணியன் உரைக்க லானான் : சோர்ந்து துயரம் சூழ்ந்த வேந்தே ! கவலை வேண்டா : கடியக் கடிந்திடு. நுவலுவன் உறுதியாய் நூல்கள் ஆய்ந்தே. செஞ்ஞா யிறொத்த செல்வனை அரசி 5 10 இஞ்ஞா லமுய்ய ஈன்றளித் திடுவாள்; வறிஞன் பெற்ற வைப்பே போல அறிஞன் ஒருவனை அரிதிற் பெறுவீர். 3 வியன் - பெரிய, வண்ணம் - நல்ல நிறம்: வனப்புக் அழகு: எங்ங்ண் - எவ்வாறு, மண்ணுதல் - குளித்தல்மடு-ஆழமான நீர்நிலை. கண்மணி - குழந்தை (உவமை ஆகுபெயர்). 2 கணியன். சோதிடன்; கணிப்பு - சாதகம். 3 கோள்கள் - கிரகங்கள். 4 நுவலுதல் - சொல்லுதல் 5 ஒர்தல் - ஆய்தல். 7 கடிய விரைவில், 11 வைப்புபுதையல், -