பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரக்தி வைர மழைத்துளிக்கும் வித்தியாசமில்லையா? அதைப் போலத்தான் என் வாழ்வும். உலகத்தின் மனித வெள் ளத்தைவிட அதனுடன் ஒட்டியும் ஒட்டாமலும் வாழும் என் வாழ்க்கைத்துளி சிறந்ததில்லையா? “இதென்ன? ஆதாரமற்ற முட்டாள் விசாரணை காதல் .. ... " கடவுளைத் துதிக்கும் கைகள் தான் கொடுவாளையுத் தொடு கிறது. இந்த மனமும் அப்படித்தான், ஆற்றில் குளித்த அதே உடம்பைச் சேற்றிலும் நனைக்கிறது. அப்பன் மனம் என்பதே ஒரு புதிர். அதை ஆராயப் புகுந்தால், வாழைப் பூவின் மடல் உரித்த கள: ததான்!” அவன் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொரண்டான். சிந்தனைச் சக்கரங்களின் கோரப் பற்க 'ளிடையே, அகப்பட்டு நைந்து கொண்டிருந்த அவனுக்கு அந்த லாஹிரி வெந்த புண்ணுக்கு விசுறுவதுபோல் இருந்தது. .. மெயிலும் பம்பாயை நெருங்கும் உற்சாகத்தில், பேய் வேகத்தில் சென்றது. சிறிது நேரத்தில் மாதங்கள், தாதர், பைகுல்லா. எல்லாவற்றையும் தாண்டி, விக்டோரியா டெர்மினலஸ்ஸில் போய், பந்தயத்தில் ஜெயித்த குதிரை போலக் கம்பீரமாக நின்றது.. அவன் மூட்டை முடிச்சுகளைத் தயார் செய்துகொண்டு கீழே இறங்கினான். அப்போது, அவன் மனம் - சர்வ சூன்யமாய் இருந்தது. அவனுடைய கண்கான நம்பிக் கையும், கசந்த உண்மையும் மறைந்துவிட்டன. இத்தனை புயல்களுக்குப் பிறகும் அவன் மனசில், "ஆணை அழிக்க வரும் ஆலமல்ல பெண்; அதை அருந்த வரும் அநாகை. ஆனால், ஆண் பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும்” என்ற உண்மை முளைகூட விடவில்லை. . சூன்யமான பாழ் மனசுடன், ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து, போர்பந்தரை நோக்கி நடந்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/29&oldid=1270205" இலிருந்து மீள்விக்கப்பட்டது